MARC காட்சி

Back
அருள்மிகு ஏடகநாதர் கோயில்
245 : _ _ |a அருள்மிகு ஏடகநாதர் கோயில் -
246 : _ _ |a திருஏடகம்
520 : _ _ |a மதுரையில் இருந்து வடக்கே வைகை ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள சிவத்தலம் திருவேடகம். இங்கு வைகை ஆறு தெற்கு வடக்காக ஓடுவதால் காசிக்கு நிகரான சிறப்பு உடையதாக இத்தலம் கருதப்படுகிறது. இத்தலத்தில் ஒரு நாள் தங்கி இருந்து இறைவனை முழுமனதுடன் பூஜை, அர்ச்சனை முதலியன செய்து வழிபட்டால் காசியில் ஆயுள் முழுவதும் வாழ்ந்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பிரம்மன், பராசரர், வியாசர் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். இக்கோவிலில் உள்ள காலபைரவர் சந்நிதியும் சிறப்பு மிக்க வழிபாட்டினைப் பெற்றுள்ளது.. பாண்டிய நாட்டுப் பாடல் பெற்றத் தலங்களில் இது 4-வது தலமாகும். இத்திருக்கோயிலின் தல தீர்த்தமான பிரம தீர்த்தத்தில் நீராடி, திருஏடகநாதேஸ்வரரை வழிபட்டால் "சித்தப்பிரமை" நீங்கும் என்பது நம்பிக்கை. மதுரையிலிருந்து 19 கி.மீ. தொலைவில் (மதுரை-சோழவந்தான் சாலையில்) திருவேடகம் என்ற ஊர் உள்ளது.இவ்வூரின் புகழுக்குக் காரணம் இங்குள்ள ஏடகநாத சுவாமி கோவிலாகும். இது ஒரு சிறந்த சிவ வழிபாட்டுத்தலம் ஆகும். ஊரும் கோவிலும் வைகையாற்றின் கரையருகில் அமைந்துள்ளன. சமணர்களை ‘அனல்வாதத்தில்’ வென்ற திருஞான சம்பந்தர் (கி.பி. 7ஆம் நூற்றாண்டு). பின் ‘புனல்வாதத்தில்’ ஈடுபட்டார். இப்போட்டியில் சமணர்கள் ஒரு சுலோகத்தை எழுதி அதை வைகை ஆற்றில் இட்டதாகவும், சமணரின் அவ்வேடு ஆற்றோடு போய்விட்டதாகவும், ஆனால் திருஞான சம்பந்தர் இட்ட ஏடு ஆற்றினை எதிர்த்துச்சென்று இன்றைய ஏடகப்பகுதியின்(திருவேடகம்) கரையில் அணைந்ததாகவும் இதனைக் கண்ட சமணர்கள் தோல்வியை ஒப்புக்கொண்ட தாகவும் கூறப்படுகிறது. சமணரை வென்ற திருஞான சம்பந்தர் ஏடணைந்த திருவேடகத்தில் சிவலிங்கம் ஒன்றை வைத்து வழிபட்டதாகவும், அதுவே இன்று திருவேடகம் கோவிலில் காட்சிதரும் ஏடகநாதர் என்றும் கூறுவர்.
653 : _ _ |a திருவேடகம், ஏடகநாதர், அனல் வாதம், புனல் வாதம், வாழ்க அந்தணர் பதிகம், வன்னியும் மத்தமும் பதிகம், கூன்பாண்டியன், திருஞானசம்பந்தர், மதுரையில் சமணர், ஏடகநாதேஸ்வரர், பாண்டிய நாட்டு சிவத்தலங்கள், மதுரை சிவன் கோயில்கள்
700 : _ _ |a காந்திராஜன் க.த.
902 : _ _ |a 04543-259311
905 : _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டு/ முற்காலப் பாண்டியர்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. திருஞானசம்பந்தரால் (மூன்றாம் திருமுறை) தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். பிற்காலப்பாண்டியர் கலைப் பாணியைப் பெற்றுள்ளது.
914 : _ _ |a 9.9951508
915 : _ _ |a 77.9885698
916 : _ _ |a ஏடகநாதேஸ்வரர்
918 : _ _ |a ஏலவார்குழலி, மாதேவியம்பிகை, சுகந்த குந்தளாம்பிகை
922 : _ _ |a வில்வம்
923 : _ _ |a பிரம தீர்த்தம், வைகை ஆறு
925 : _ _ |a காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
926 : _ _ |a ஏடு எதிரேறிய விழா, பங்குனி உத்திரம்
927 : _ _ |a இத்தலம் "பாகனூர்க் கொற்றத்து திருவேடகம்" என்றும், இறைவன் பெயர் "திருவேடகம் உடைய நாயனார்" என்றும் இங்குள்ள கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் பாண்டியர்களில் மாறவர்மன் மகனாகிய திரிபுவனச் சக்கரவர்த்தி சுந்தரபாண்டிய தேவன், சடாவர்மனாகிய திரிபுவனச் சக்கரவர்த்தி பராக்கிரம பாண்டியன், சடாவர்மனாகிய திரிபுவனச் சக்கரவர்த்தி விக்கிரமபாண்டியன், சடாவர்மனாகிய திரிபுவனச் சக்கரவர்த்திகள்,ஸ்ரீவல்லபதேவன், இவர்கள் காலங்களிலும், கிருஷ்ணதேவ மகாராயர் காலத்தில் சகம் 1448இலும் பொறிக்கப்பெற்ற மொத்தம் பதினான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இக்கல்வெட்டுக்களில்(See the Annual Report on South Indian Epigraphy for the year 1905 No. 677 - 689.) சிவபெருமானின் திருப்பெயர் திருவேடகமுடைய நாயனார் என்று குறிக்கப்பெற்றுள்ளது. மாறவர்மனாகிய திரிபுவனச் சக்கரவர்த்தி, சுந்தரபாண்டியன், சோணாட்டைக் கைப்பற்றி, முடிகொண்ட சோழபுரத்தில் விஜயா பிஷேகமும், வீராபிஷேகமும் செய்துகொண்டவன் என்றும், அவனே சோணாடு வழங்கிய சுந்தரபாண்டியனென்றும், கோனேரின்மை கொண்டான் என்னும் பட்டம்பெற்றவன் என்றும் இக்கோயில் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இம்மன்னன் காலத்தில் இவ்வூரில் இருந்த திருஞானசம்பந்தர் திருமடத்தில் இருபது தபசியர் உண்பதற்கு நிலம் அளிக்கப்பெற்ற செய்தி கூறப்பெற்றுள்ளது. ஸ்ரீ வல்லபதேவன் கல்வெட்டில், இவ்வூர் பாகனூர்க் கூற்றத்தைச் சேர்ந்ததென்று கூறப்பெற்றுள்ளது. கிருஷ்ணதேவமாராயர் கல்வெட்டு பச்சைப் பெருமாள் பச்சை கண்டிய தேவர் நிலம் அளித்ததை புலப்படுத்துகின்றது.
928 : _ _ |a சதாசிவம் மற்றும் ஐஸ்வரியேஸ்வரரின் ஓவியங்கள் காணப்படுகின்றன. இவை காலத்தால் பிந்தியன.
929 : _ _ |a கருவறையில் இலிங்க வடிவில் ஏடகநாதர் காட்சியளிக்கிறார். ஏலவார் குழலி கருவறையில் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். அம்மன் சந்நிதி கற்றூண் ஒன்றில் திருஞானசம்பந்தரின் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.மேலும் தூண் புடைப்புச் சிற்பங்கள் இங்கு இறையுருவங்களாக அமைந்துள்ளன. வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள படித்துறையில் அன்னையர் எழுவர் சிற்பங்களும், திருஞானசம்பந்தர், கணபதி, ஆற்றில் எதிரேறி மிதந்து வரும் ஏடு, விடை வாகனத்தில் காட்சி தரும் அம்மையப்பர் ஆகிய சிற்பங்கள் தலபுராணத்தை விளக்கும் புடைப்புச் சிற்பங்களாகஅமைந்துள்ளன.
930 : _ _ |a கி.பி.7-ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்டு வந்த பாண்டிய மன்னன் கூன்பாண்டியன் என்ற நின்றசீர் நெடுமாறன் சமண சமயத்தைத் தழுவியிருந்தான். மன்னன் வெப்பு நோயால் துன்புற்றிருந்தான். அவன் மனைவி மங்கையர்க்கரசி சோழர்குல இளவரசி. மங்கையர்க்கரசி சிறந்த சிவ பக்தையாக திகழ்ந்தாள். மன்னனின் நிலை கண்டு, மன்னனையும் குடிகளையும் காக்கும் பொருட்டு சைவத்தை மீட்டெடுக்க முனைந்து, அமைச்சர் குலச்சிறையார் மூலம் திருஞானசம்பந்தரை மதுரைக்கு அழைத்தாள். மங்கையர்க்கரசி அழைப்பின் பேரில் திருஞானசம்பந்தர் மதுரைக்கு வந்து, “மந்திரமாவது நீறு“ என்னும் பதிகத்தினைப் பாடி, திருநீறு பூசி அரசன் கூன்பாண்டியனின் வெப்ப நோய் நீங்க உதவினார். அங்கிருந்த சமணர்கள் ஆத்திரமுற்று சம்பந்தருடன் அனல் வாதம் புனல் வாதம் புரிந்தனர். சமணர்கள் தங்கள் ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆயிற்று. ஆனால் சம்பந்தர் “போகமார்த்த“ எனத் தொடங்கும் திருநள்ளாற்றுப் பதிகம் எழுதிய ஏட்டை தீயில் இட்ட போது அது எரிந்து சாம்பல் ஆகாமல் பச்சையாகவே இருந்தது. பின்பு புனல் வாதத்தின் போது சமணர்கள் எழுதிய ஏட்டை ஆற்றில் விட்ட போது அது ஆற்றுடன் சென்றது. ஆனால் சம்பந்தர் "வாழ்க அந்தணர் " என்று தொடங்கும் பதிகம் எழுதியிட்ட ஏட்டை வைகை ஆற்றில் விட்ட போது அது வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து சென்றது. மதுரை பாண்டிய மன்னனின் மந்திரி குலச்சிறையார் என்பவர் குதிரையின் மீதேறி வைகை நதியின் நீரோட்டத்தை எதிர்த்து செல்லும் ஏட்டைப் பின் தொடர்ந்து செல்ல அது ஓரிடத்தில் வைகை ஆற்றின் கரையில் ஒதுங்கியது. பாண்டிய மன்னன் ஏடு ஒதுங்கிய இடத்தில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டு அங்கு ஒரு ஆலயம் எழுப்பினான். அதுவே திருவேடகம் என்ற சிவத்தலமாகியது. “வன்னியும் மத்தமும்“ எனத் தொடங்கும் பதிகத்தினை திருஞானசம்பந்தர் இத்தலத்தில் பாடி, இறைவனைப் போற்றினார்.
932 : _ _ |a இறைவனின் கருவறைச் சுவர்களும், இறைவி ஏலவார் குழலியம்மையின் கருவறைச் சுவர்களும் தற்காலச் சிற்பிகளின் சிறந்த உளி வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளன. அம்மன் சந்நிதி முன்னுள்ள கற்றூண்களில் ஒன்றில் திருஞான சம்பந்தரின் சிறிய உருவமும், மற்றொன்றில் சமணர் ஒருவரின் உருவமும் உள்ளன. இக்கோவிலின் நுழைவாயிலிலுள்ள முற்றுப்பெறா நிலையிலுள்ள ‘மொட்டைக் கோபுரம்’ விஜயநகர அரசுகாலப் பணி என்று கூறப்படுகிறது. இந்நூற்றாண்டில், நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் இக்கோவிலைச் சீரிய முறையில் புதுப்பித்துக் கட்டியுள்ளனர்.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a சோழவந்தான் ஜெனகமாரியம்மன் கோயில், கோச்சடை அய்யனார் கோயில், கோச்சடை மீனாட்சி சொக்கநாதர் கோயில், பரவை முத்துநாயகி அம்மன் கோயில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில்
935 : _ _ |a மதுரையில் இருந்து சோழவந்தான் செல்லும் சாலையில் 16 கிலோ மீட்டர் தூரத்தில் திருவேடகம் உள்ளது. நகரப் பேருந்து வசதிகள் மதுரையில் இருந்து சோழவந்தானுக்கு உள்ளன.
936 : _ _ |a காலை 6.00 மணி முதல் 11.00 மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 வரை
937 : _ _ |a பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி, புதூர், ஆரப்பாளையம் பேருந்து நிலையம்
938 : _ _ |a மதுரை, சோழவந்தான்
939 : _ _ |a மதுரை
940 : _ _ |a மதுரை நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000108
barcode : TVA_TEM_000108
book category : சைவம்
cover images TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_கோபுரம்-தாங்குதளம்-0006.jpg :
Primary File :

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_தூண்கள்-0021.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_நுழைவுவாயில்-0001.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_நுழைவுவாயில்-0002.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_நந்தி-0003.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_கொடிமரம்-பலிபீடம்-0004.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_கோபுரம்-தாங்குதளம்-0005.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_கோபுரம்-தாங்குதளம்-0006.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_கோபுரம்-கொடிப்பெண்-0007.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_கோபுரம்-கொடிப்பெண்-0008.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_கோபுரம்-கொடிப்பெண்-0009.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_கோபுரம்-கொடிப்பெண்-0010.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_கோபுரம்-கொடிப்பெண்-0011.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_கோபுரம்-கொடிப்பெண்-0012.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_கோபுரம்-கொடிப்பெண்-0013.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_கோபுரம்-கொடிப்பெண்-0014.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_கோபுரம்-0015.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_சம்பந்தர்-0016.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_தேவாரப்பதிகம்-0017.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_கொடிப்பெண்-0018.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_கொடிப்பெண்-0019.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_கொடிப்பெண்-0020.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_தூண்-புடைப்புச்சிற்பம்-0022.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_தூண்-புடைப்புச்சிற்பம்-0023.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_தூண்-புடைப்புச்சிற்பம்-0024.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_தூண்-புடைப்புச்சிற்பம்-0025.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_தூண்-புடைப்புச்சிற்பம்-0026.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_தூண்-புடைப்புச்சிற்பம்-0027.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_தூண்-புடைப்புச்சிற்பம்-0028.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_தூண்-புடைப்புச்சிற்பம்-0029.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_திருச்சுற்று-0030.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_சிதிலமடைந்த-மண்டபம்-0031.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_அன்னையர்-எழுவர்-0032.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_வைகை-ஆறு-0033.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_தலபுராணச்-சிற்பம்-0034.jpg

TVA_TEM_000108/TVA_TEM_000108_திருவேடகம்_ஏடகநாதர்-கோயில்_தலபுராணச்-சிற்பம்-0035.jpg